பிற விளையாட்டு

ஆசிய துப்பாக்கி சுடுதல்: வெள்ளிப் பதக்கம் வென்ற மனுபாக்கர்

வியட்நாம் வீராங்கனை நுயென் துய் டிராங், இந்தியாவின் மனு பாக்கர் இடையே போட்டி நிலவியது.

புதுடெல்லி,

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள கர்னிசிங் சூட்டிங் ரேஞ்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தின் இறுதி சுற்றில் வியட்நாம் வீராங்கனை நுயென் துய் டிராங், இந்தியாவின் மனு பாக்கர் இடையே கடும் போட்டி நிலவியது.

கடைசியில் இருவரும் 35 புள் ளிகளுடன் சமநிலை வகித்தனர். இதைத்தொ டர்ந்து கடைபிடிக்கப்பட்ட 'ஷூட்-ஆப்'பில் நுயென் துய் டிராங் முன்னிலை பெற்று தங்கப்ப தக்கத்தை வென்றார். மனு பாக்கர் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.