ஹைகோ,
ஆசிய இளையோர் (18 வயதுக்கு உட்பட்டோர்) கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் ஹைகோ நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.
இந்த போட்டி தொடரில் 'பி' பிரிவில் இடம் பிடித்த இந்திய அணி நேற்று நடந்த தனது கடைசி மற்றும் 3-வது லீக் ஆட்டத்தில் பிலிப்பைன்சை சந்தித்தது.
பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் சரிவில் இருந்து அபாரமாக மீண்டு வந்த இந்திய அணி 16-25, 20-25, 25-20, 25-23, 15-4 என்ற செட் கணக்கில் பிலிப்பைன்சை சாய்த்து 2-வது வெற்றி பெற்றது. இந்திய அணி (2 வெற்றி. ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.