பிற விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடங்குகிறது

பி.வி.சிந்து, தனது முதல் சுற்றில் இனெஸ் லூசியா காஸ்டிலோவை (பெரு) சந்திக்கிறார்.

சிட்னி,

ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து, தனது முதல் சுற்றில் இனெஸ் லூசியா காஸ்டிலோவை (பெரு) சந்திக்கிறார்.

தன்வி ஷர்மா, மாள்விகா பான்சோத், ஆயுஷ் ஷெட்டி, எச்.எஸ்.பிரனாய் உள்ளிட்ட இந்தியர்களும் இந்த போட்டி யில் களம் காணுகிறார்கள்.