பிற விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தோல்வி

இந்தியாவின் தன்வி ஷர்மா , ஜப்பானின் அகானே யமாகுச்சி உடன் மோதினார்.

சிட்னி,

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் சிட்னியில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா , ஜப்பானின் அகானே யமாகுச்சி உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அகானே யமாகுச்சி 21-14, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

அரையிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுடன் , ஜப்பானின் அகானே யமாகுச்சி உடன் மோதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.