சிட்னி,
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் சிட்னியில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தைவானின் சென் சூ யூ உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பி.வி.சிந்து 21-6, 21-9 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அரையிறுதியில் பி.வி.சிந்து, ஜப்பானின் அகானே யமாகுச்சி உடன் மோதுகிறார்.