சிட்னி,
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் சிட்னியில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் அகானே யமாகுச்சி உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாகி விளையாடி ஆதிக்கம் செலுத்தி யமாகுச்சி 22-20, 21-12 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்தியாவின் பி.வி. சிந்து தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.