Image Courtesy: AFP 
பிற விளையாட்டு

ஆசிய பேட்மிண்டன் போட்டி: வெண்கலம் வென்றார் பி.வி.சிந்து..!!

ஆசிய பேட்மிண்டன் போட்டியின் அரைஇறுதியில் ஜப்பான் வீராங்கனையிடம் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.

மணிலா,

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள ஹீ பிங் ஜியோவை (சீனா) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான அகானா யமாகுச்சியை (ஜப்பான்) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-13, 19-21, 16-21 என்ற செட் கணக்கில் யமாகுச்சியிடம் தோல்வியடைந்தார். இதன் மூலம் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் சிந்து வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறார்.

இதனையடுத்து ஜப்பான் வீராங்கனை யமாகுச்சி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

SCROLL FOR NEXT