சென்னை,
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் அலெக்சாண்டோவா உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சபலென்கா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.