கெய்ரோ,
உலக ஜூனியர் பேட்மிண்டனில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.
2026 உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் ஜக்சேர் சிங் இந்தோனேசிய வீரர் ராதித்யா பயு வர்தனாவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 6-15, 15-13, 3-15 என்ற செட் கணக்கில் ஜக்சேர் சிங் தோல்வியடைந்தார். இதையடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த அவர் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
இதன்மூலம் உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்ற 9-வது இந்திய வீரர் என்ற பெருமையை ஜக்சேர் சிங் பெற்றார்.
அரையிறுதியில் தோல்வியடைந்தாலும், உலக அளவிலான ஜூனியர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது ஜக்சேர் சிங்கின் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.