நாகோயா,
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் பேட்மிண்டன் அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
ஆசிய விளையாட்டுப் அணிகள் பிரிவு போட்டியில் இந்திய ஆண்கள் பேட்மிண்டன் அணி அரையிறுதியில் பலம் வாய்ந்த சீனாவை எதிர்கொண்டது.
அரையிறுதியில் முதலில் ஷி யூகி, இந்தியாவின் லக்ஷ்யா செனை வீழ்த்தி சீனாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். பின்னர் சாட்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி–சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் லியாங் வெய்கெங்–வாங் சாங் ஜோடியை 21-11, 22-20 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவை சமநிலைக்கு கொண்டு வந்தது.
அதன்பிறகு நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் லி ஷிபெங், இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டியை 21-19, 21-13 என்ற கணக்கில் வீழ்த்தினார். தொடர்ந்து நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் ஹரிஹரன் அம்சகருணன்–எம்.ஆர். அர்ஜுன் ஜோடி தோல்வியடைந்ததால் சீனா 3-1 என வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.இந்திய ஆண்கள் பேட்மிண்டன் அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
இதன்மூலம் இந்திய ஆண்கள் பேட்மிண்டன் அணி தொடர்ச்சியாக 2-வது ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் அணிகள் பிரிவில் பதக்கம் வென்றுள்ளது.