லக்சயா சென் (image courtesy: BAI Media via ANI) 
பிற விளையாட்டு

கனடா ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் சாம்பியன்

கனடா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கேல்கேரி நகரில் நடந்து வருகிறது.

கேல்கேரி,

கனடா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கேல்கேரி நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் தரவரிசையில் 19-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் லக்சயா சென், சீனாவின் லி ஷி பெங்கை எதிர் கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் லக்சயா சென் 21-18, 22-20 என்ற நேர் செட்டில் லி ஷி பெங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.