பிற விளையாட்டு

கனடா ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனைகள் வெற்றி

இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், பிரான்சின் அன்ன டட்ரநோவா உடன் மோதினார்.

சென்னை,

கனடா ஓபன் பேட்மிண்டன் தொடர் கனடாவில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், பிரான்சின் அன்ன டட்ரநோவா உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆகாஷ் காஷ்யப் 21-14, 21-12 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்யா ஹேமந்த் அமெரிக்காவின் தீஷா குப்தாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.