முனிச்,
ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதன் அரையிறுதி 2 ஆட்டங்கள் கொண்டதாகும். இதில் நடப்பு சாம்பியனான பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி., பிரான்ஸ்)- பேயர்ன் முனிச் (ஜெர்மனி) அணி கள் இடையிலான அரையிறுதியின் 2-வது ஆட் டம் ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்தது.
விறுவிறுப்பான இந்த ஆட் டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந் தது. பி.எஸ்.ஜி. அணியில் உஸ்மானே டெம் பிலே 3-வது நிமிடத்திலும், பேயர்ன் முனிச் தரப்பில் ஹாரிகேன் கடைசி நிமிடத்திலும் கோலடித்தனர். இருப்பினும் முதலாவது ஆட்டத் தில் பி.எஸ்.ஜி. அணி 5-4 என்ற கோல் கணக் கில் வென்று இருந்ததால் ஒட்டுமொத்தத்தில் 6-5 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச்சை வெளியேற்றி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.