பிற விளையாட்டு

செஸ் சாம்பியன்ஷிப்: வைஷாலி சாம்பியன்

இந்தியாவின் வைஷாலி கஜகஸ்தானின் அலுவா நூர்மனை எதிர்கொண்டார்.

டோக்கியோ,

மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் டோக்கியோவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் வைஷாலி கஜகஸ்தானின் அலுவா நூர்மனை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட வைஷாலி 1.5-0.5 புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.