பிற விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணி வெற்றி

இந்திய அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ் வெற்றியை தேடித்தந்தனர்.

சமர்கண்ட்,

46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நேற்று நடந்த 7-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றது. இந்திய அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ் வெற்றியை தேடித்தந்தனர்.

7-வது சுற்று முடிவில் இந்தியா 12 புள்ளிகளு டன் 3-வது இடத்தில் இருக்கிறது. பெண்கள் பிரிவின் 7-வது சுற்றில் இந்தியா 3.5-0.5 என்ற புள்ளி கணக்கில் ஜெர்மனியை தோற்கடித்து 6-வது வெற்றியை வசப்படுத்தியது. இன்று 8-வது சுற்று ஆட்டங்கள் நடக்கிறது.

SCROLL FOR NEXT