சென்னை,
46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடந்து வருகிறது. ஒபன் பிரிவில் நேற்று நடந்த 9-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான இந்தியா 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி 7-வது வெற்றியை பதிவு செய்தது. பிரக்ஞானந்தா. அர்ஜூன் எரிகசி நிஹால் சரின் தங்களது ஆட்டங்களில் டிரா கண்ட நிலையில், குேகஷ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் டான் சென்கோவை மடக்கினார். இன்னும் 2 சுற்று எஞ்சியுள்ள நிலையில் இந்தியா 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.
உஸ்பெகிஸ்தான் 16 புள்ளியுடன் முதலிடம் வகிக்கிறது. பெண்கள் பிரிவின் 9-வது சுற்றில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானை தெறிக்க விட்டது. 7-வது வெற்றியை பெற்ற இந்தியா 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. சீனா 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இன்று 10-வது சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன.என தெரிவித்தார்.