பிற விளையாட்டு

ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு விருந்தளிக்கும் முதல்-அமைச்சர் விஜய்

விடுதியில் உள்ள மாணவர்களும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்ய உள்ளோம்

சென்னை,

ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று தாயகம் திரும்பிய தமிழகத்தை சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார். ஷமீனா ரியாஸ் மற்றும் தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற தடகள வீரர் ரமேஷ் ராஜேஷ் ஆகியோருக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. அவர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "பதக்கங்கள் வென்று நாட்டையும், நமது மாநிலத்தையும் பெரு மைப்படுத்திய விளையாட்டு வீரர்கள் தான் உண்மையான ஹீரோக்கள். அடுத்து ஒலிம்பிக் போட்டியில் சாதிப்பதே உங்களது இலக்காக இருக்க வேண்டும். அதற்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து தர நாங்கள் தயாராக இருக்கிறோம். விளையாட்டுத்துைறயில் நிறைய திட்டங்கள் செயல்படுத்த உள்ளோம். விளையாட்டு வீரர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய விடுதிகள் அனைத்து மாவட்டங்களிலும் தயாராகி வருகிறது.

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் விருந்தளித்து கவுரவிக்க உள்ளார். அவருடன் பேசி இதற்கான தேதி அறிவிக்கப்படும். அதில் விடுதியில் உள்ள மாணவர்களும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்ய உள்ளோம். என்றார்.

SCROLL FOR NEXT