ஷென்சென்,
சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றனர்.
சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 சர்வதேச பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
அதன்படி, இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி சீனாவின் ஹி ஜி டிங்-ரென் ஸியாங் யு ஜோடியை எதிர்கொண்டது.
1 மணி நேரம் 10 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த இப்போட்டியில்11-21, 21-13, 21-17 என்ற செட் கணக்கில் சீன ஜோடியை வீழ்த்தி இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
இதன் மூலம் சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 சர்வதேச பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இதற்கு முன்பு 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் சீன மாஸ்டர்ஸ் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சாத்விக்-சிராக் ஜோடி தோல்வியை சந்தித்தது. ஆனால், தற்போது முதல் முறையாக சாத்விக்-சிராக் ஜோடி சீன மாஸ்டர்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.