பிற விளையாட்டு

சீன மாஸ்டர்ஸ்: 3-வது முறையாக இறுதிப்போட்டியில் சாத்விக் - சிராக்... முதல் பட்டத்தை வெல்வார்களா?

இறுதிப்போட்டியில் சாத்விக்-சிராக் ஜோடி, சீனாவின் ஹி ஜி டிங்-ரென் ஸியாங் யு ஜோடியை எதிர்கொள்கிறது.

ஷென்சென்,

சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

வெற்றி

சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் நூர் முகமது அஸ்ரின் அயூப்-டான் வீ கியாங் ஜோடியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 21-16, 18-21, 21-11 என்ற செட் கணக்கில் மலேசிய இணையை வீழ்த்தியது. 66 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் வெற்றி பெற்ற சாத்விக்-சிராக் ஜோடி, சீன மாஸ்டர்ஸ் தொடரில் 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

முதல் பட்டத்தை வெல்லுமா?

இதற்கு முன்பு 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் சீன மாஸ்டர்ஸ் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சாத்விக்-சிராக் ஜோடி, அந்த இரு முறையும் 2-வது இடத்தையே பிடித்தது. இதனால், இந்த முறை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சீன மாஸ்டர்ஸ் பட்டத்தை முதல் முறையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய ஜோடி களமிறங்குகிறது.

சீன ஜோடியுடன் இன்று மோதல்

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சாத்விக்-சிராக் ஜோடி, சீனாவின் ஹி ஜி டிங்-ரென் ஸியாங் யு ஜோடியை எதிர்கொள்கிறது.

SCROLL FOR NEXT