மியாமி,
சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, பிரிட்டனின் ஜூலியன் கேஷ்-லாய்டு கிளாஸ்பூல் ஜோடி உடன் மோதியது.இந்த ஆட்டத்தில் பிரிட்டன் ஜோடி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.