கிளாஸ்கோ,
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு 2026 குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனை சாக்ஷி சவுத்ரி பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இறுதிப்போட்டியில் இங்கிலாந்தின் சார்லி டேவிசன்-ஐ எதிர்கொண்ட சாக்ஷி, தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்திய வீராங்கனை பிரியா கங்காஸ் பெண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
முன்னதாக இந்தியாவின் குத்துச்சண்டை போட்டியில் ப்ரீத்தி பவார், ஜெய்ஸ்மின் லம்போரியா, இருவரும் தங்கம் வென்றது குறிபிடத்தக்கது.