பிற விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டு: வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர்

இந்திய வீரர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கிளாஸ்கோ,

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 60 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீரர் சானம்பம் ரிஷிகாந்த சிங் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

'ஸ்னாட்ச்' பிரிவில் 121 கிலோ மற்றும் 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 143 கிலோ என மொத்தம் 264 கிலோ எடையை அவர் தூக்கினார்.

மலேசியாவின் முகமது அனிக் பின் கஸ்தான், 273 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார். 260 கிலோவுடன் கென்யாவின் ஜோசுவா அமுங்கா எம்போயா வெண்கலப் பதக்கம் வென்றார்.