பிற விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டு: இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிளாஸ்கோ,

23-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நேற்று தொடங்கியது. ஆகஸ்டு 2-ந்தேதி வரை நடக்கிறது. இதில் காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள 74 நாடுகளில் இருந்து ஏறக்குறைய 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

இதில் இந்தியா சார்பில் 126 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இதில் 78 பேர் வீரர்கள் 48 வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள். 8 விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள். 5 பாரா விளையாட்டுகளில் கலந்துகொள்கிறார்கள்.

இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கும் வேளையில், இந்திய அணிக்கு எனது நல்வாழ்த்துக்கள். நமது விளையாட்டு வீரர்கள் இந்தப் போட்டிகளில் பேரார்வம், உறுதி மற்றும் சிறந்து விளங்கும் மனப்பான்மையுடன் பங்கேற்பார்கள் என உறுதியாக நம்புகிறேன். நமது விளையாட்டு வீரர்களின் திறமையும் அர்ப்பணிப்பும் எப்போதும் எண்ணற்ற இந்தியர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன என தெரிவித்துள்ளார்.