புதுடெல்லி,
காமன்வெல்த் இளையோர், ஜூனியர் மற்றும் சீனியர் பளுதூக்குதல் சாம்பி யன்ஷிப் போட்டி சமோவா நாட்டின் அபியா நகரில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளில் 4 தங்கம் வென்று அசத்திய இந்தியா 3-வது நாளி லும் பதக்க வேட்டையை தொடர்ந்தது. பெண்களுக்கான 69 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பெல்லானா ஹரிகா ஸ்னாட்ச் முறையில் 86 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 111 கிலோவும் என மொத்தம் 197 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். மற்ற இந்தியர்களான கரங்கி தரங்கினி, பூமிகா மோஹிதே (63 கிலோ எடைப்பிரிவு) வெள்ளிப்ப தக்கம் கைப்பற்றினர்.
சீனியர் பிரிவில் ஆண்களுக்கான 88 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் நிப்பானே மொத்தம் 324 கிலோ தூக்கி வெள்ளிப்பதக்கம் பெற் றார்.