ஒடென்சே,
டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஒடென்சே நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி 11-21, 21-13, 10-21 என்ற செட் கணக்கில் ஆல்வி பர்ஹானிடம் (இந்தோனேசியா) தோற்று நடையை கட்டினார். பெண்கள் ஒற்றையரில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா 21-23, 21-16, 16-21 என்ற செட் கணக்கில் சீனாவின் கியான் ஜி ஹானிடம் போராடி வீழ்ந்தார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-12, 15-21, 19-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹீ ஜி டிங்- ரென் ஜியாங் யூ இணையிடம் தோற்று ஏமாற்றம் அளித்தது.