ஒடென்சே,
டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஒடென்சே நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா 15-21, 13-21 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான அன்சே யங்கிடம் (தென்கொரியா) பணிந்தார்.
பெண்கள் இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிந்த் கூட்டணி 21-14, 17-21, 11-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் டேன் பியர்லி-தினா இணையிடம் போராடி தோற்றது. இத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.