ஒடென்ஸ்,
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி அணிகள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
டென்மார்க்- உக்ரைன் அணிகள் இடையே சர்வ தேச நட்புறவு கால்பந்து போட்டி ஒடென்ஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. விறுவிறுப்பான இந்த மோதலில் டென்மார்க் 2-1 என முன்னிலை வகித்த போது. டென்மார்க் வீரர் 34 வயதான கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் நிலைகுலைந்து விழுந்தார். ஏற்னவே 5 ஆண்டுக்கு முன்பு இதே போல் விளையாடிய போது மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்தில் சுருண்டு விழுந்து சிகிச்சைக்கு பிறகு தேறினார். ' மறுபடியும் இதே போல் சரிந்ததால் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக முதலுதவி அளிக் கப்பட்டு மயக்கம் தெளிந்ததும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறிய அவர் தற்போது தான் நன்றாக இருப்பதாக கூறியுள்ளார். அந்த போட்டி பாதியில் கைவிடப்பட்டது.