பிற விளையாட்டு

தேசிய சைக்கிளிங் போட்டி: தமிழக அணி ‘சாம்பியன்’

ஜூனியர் பிரிவில் தலா 2 தங்கம் வென்று அசத்தினர்.

சென்னை,

23-வது எம்.டி.பி. தேசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் மகேந்திரகிரியில் 4 நாட்கள் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 700 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். கரடு, முரடான சாலையில் நடந்த இந்த போட்டியில் தமிழகத்தின் சவுபர்ணிகா, அந்தோணி ராஜ் ஆகி யோர் ஜூனியர் பிரிவில் தலா 2 தங்கம் வென்று அசத்தினர்.

இதே போல் இளையோர், சப்-ஜூனியர், சீனியர் பந்தயங்களிலும் பதக்கங்களை கைப்பற் றிய தமிழகம் மொத்தத்தில் 15 பதக்கங்களுடன் (4 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம்) தொடர்ந்து 2-வது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட் டத்தை தட்டிச் சென்றது.

SCROLL FOR NEXT