பிற விளையாட்டு

டைமண்ட் லீக்: 3வது இடம் பிடித்த இந்திய வீரர்

'டைமண்ட் லீக்' (Diamond League) போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

சென்னை,

உயரம் தாண்டுதலில் தேசிய சாதனையாளரான சர்வேஷ் குஷாரே, மொனாக்கோவில் நடைபெற்ற 'டைமண்ட் லீக்' (Diamond League) போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

31 வயதான குஷாரே, 2.12 மீ, 2.16 மீ, 2.20 மீ, 2.23 மீ மற்றும் 2.26 மீ உயரங்களை கடந்தார். இதனால் சர்வேஷ் குஷாரே மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

உக்ரைனை சேர்ந்த ஒலே டொரோஷ்சுக் 2.32 மீட்டர் உயரத்தை கடந்து பட்டத்தை வென்றார்.கிரேட் பிரிட்டனின் ஜாக் கிமானி 2.30 மீட்டர் உயரத்துடன் இரண்டாம் இடத்தை பிடித்தார்.