பிற விளையாட்டு

துபாய் ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பி உடன் மோதினார்.

துபாய்,

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பி உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மெத்வதேவ் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.