புதுடெல்லி,
2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா, ஜெர்மனி, கத்தார் உள்பட 7 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. தங்களது விளையாட்டு திட்டங்களை, ஒலிம்பிக் எதிர்கால போட்டிக்கான ஆணையத்திடம் அடுத்த மாதத்துக்குள் சமர்பிக்கும்படி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டி உரிமத்தை பெறும் முயற்சியில் தீவிரம் காட்டும் இந்தியா, 'ஒன்றாக எழுவோம்' என்ற கோஷத்துடன். இதற்கான முதற் கட்ட திட்டங்களை இந்த மாத இறுதிக்குள் எதிர்கால போட்டி ஆணையத்திடம் அளிக்க இருப்பதாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று தெரிவித்தார்.