பர்மிங்காம்,
இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 24-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் அபய்சிங் 9-11, 4-11, 11-7, 10-12 என்ற செட் கணக்கில் 8-ம் நிலை வீரரான முகமது ஜகாரி யாவிடம் (எகிப்து) தோற்று வெளியேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரி சையில் 40-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் வீர் சோத்ராணி 10-12, 9-11, 3-11 என்ற செட் கணக்கில் 6-ம் நிலை வீரரான ஜோயல் மாகினிடம் (வேல்ஸ்) வீழ்ந்தார்.