சென்னை,
2-வது ஆசிய மாஸ்டர்ஸ் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் கடந்த 7 நாட்கள் நடந்தது. இதில் ஆண்களுக்கான 65 முதல் 69 வயது பிரிவில் பங்கேற்ற தமிழ்நாடு நீச்சல் சங்க செயலாளரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க இணை செயலாளருமான டி.சந்திரசேகரன் 100, 200 மீட் டர் பிரஸ்ட்ஸ்டிரோக் பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும், 50 மீட்டர் பிரஸ்ட்ஸ்டிரோக் பந்தயத்தில் வெண்கலப்பதக்கமும் என 3 பதக்கங்கள் வென்றார்.
அவரது மகளும், தமிழ்நாடு தபால் துறை ஊழியருமான ஐஸ்வர்யா பெண்களுக்கான 30 முதல் 34 வயது பிரிவில் கலந்து கொண்டு 50,100, 200 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயங்களில் தங்கப்பதக்கமும், 50 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் வெண்கலப்பதக்கமும், 4x50 மீட்டர் மெட்லே ரிலேவில் வெள்ளிப்பதக்கமும், 4x50 மீட்டர் பிரீஸ்டைல் கலப்பு ரிலே. 4x50 மீட்டர் பிரீஸ்டைல் பெண்கள் ரிலே ஆகியவற்றில் வெண்கலப்பதக்க மும் என 7 பதக்கங்களை வென்று குவித்தார். இதன் மூலம் சென் னையை சேர்ந்த சந்திரசேகர், ஐஸ்வர்யா ஆகியோர் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் ஹங்கேரியில் நடைபெறும் உலக மாஸ்டர்ஸ் நீச்சல் சாம் பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.