பிற விளையாட்டு

பார்சிலோனா ஓபன்: இத்தாலி வீரர் காலிறுதிக்கு முன்னேற்றம்

இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, பிரான்சின் கொரன்டின் மவுடெட் உடன் மோதினார்.

மாட்ரிட்,

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, பிரான்சின் கொரன்டின் மவுடெட் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய முசெட்டி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.