பிற விளையாட்டு

சவுதி அரேபியாவில் பார்முலா-1 கார் பந்தயம் ரத்து

.உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 24 சுற்றுகள் நடத்தப்படும்.

துபாய்,

பிரபல விளையாட்டான பார்முலா-1 கார் பந்தயம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 24 சுற்றுகள் நடத்தப்படும்.உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 24 சுற்றுகள் நடத்தப்படும்.

கார் பந்தயத்தின் 4-வது சுற்று பக்ரைனில் ஏப்ரல் 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரையும், 5-வது சுற்று சவுதி அரேபியாவில் ஏப்ரல் 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக பஹ்ரைன்- சவுதி அரேபியாவில் நடைபெற இருந்த பார்முலா-1 கிராண்ட்பிரீ சுற்று போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக பார்முலா-1 நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.