பிற விளையாட்டு

பார்முலா1 கார் பந்தயம்: இத்தாலி வீரர் வெற்றி

தொடர்ந்து 4-வது வெற்றியை வசப்படுத் தினார்.

மான்ட்ரியல்,

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படு கிறது. இதன் 5-வது சுற்றான கனடா கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள மான்ட்ரியல் ஓடுதளத்தில் நடந்தது. பந்தய தூர மான 305.270 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 11 அணிகளைச் சேர்ந்த 22 வீரர்கள் காரில் சீறிப் பாய்ந்தனர். இதில் இத்தாலி வீரர் கிமி அன்டோ னெல்லி (மெர்சிடஸ் அணி) ஒரு மணி 28 நிமி டம் 15.758 வினாடிகளில் இலக்கை கடந்து இந்த சீசனில் தொடர்ந்து 4-வது வெற்றியை வசப்படுத் தினார். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது.

பார் முலா! பந்தயத்தில் இத்தாலி வீரர் ஒருவர் தொடர்ந்து 4 ரேசில் வெற்றி பெறுவது 1952-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

SCROLL FOR NEXT