பாரீஸ்,
“கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்சின் ஆர்தர் ரின்டெர்க்னெச் 7-6 (7-5), 6-2, 6-3 என்ற செட் கணக்கில் தகுதி நிலை வீரர் ரோடினோவை (ஆஸ்திரியா) வீழ்த்தி 2-வது சுற்றை எட்டினார்.
ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-4, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் டோபி சாமுவேலை வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 3-6, 6-3, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் ஜெஸ்பர் டீ ஜோங்கிடம் தோற்று வெளியேறினார்.