பிற விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

இகா ஸ்வியாடெக் (போலந்து) ,சக நாட்டவரான மாக்டா லினெட்டை எதிர்கொண்டார்.

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் (போலந்து) ,சக நாட்டவரான மாக்டா லினெட்டை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இகா ஸ்வியாடெக் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 4-வது சுற்றை எட்டினார்.

மற்றொரு ஆட்டத்தில் உக்ரைனின் மார்த்தா கோஸ்ட்யுக் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் விக்டோரிஜியா கோலுபிக்கை (சுவிட்சர்லாந்து) வீழ்த்தினார் .