பிற விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இத்தாலி வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அர்ஜென்டினாவின் சோலானா சியாரா உடன் மோதினார்.

பாரீஸ்,

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அர்ஜென்டினாவின் சோலானா சியாரா உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா வீராங்கனை 3-6 6-4, 6-3 என வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.இதன்மூலம் ஜாஸ்மின் பவுலினி 2வது சுற்றிலேயே பிரெஞ்சு ஓபன் தொடரில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.