பிற விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சாரா எர்ரானி- ஆன்ட்ரியா வவசோரி இணை சாம்பியன்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

சென்னை,

'கிராண்ட் ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் சாரா எர்ரானி- ஆன்ட்ரியா வவசோரி கூட்டணி 4-6, 6-3 (10-4) என்ற செட் கணக்கில் கேப்ரியலா டாப்ரோஸ்கி (கனடா)- இவான் கிங் (அமெரிக்கா) இணையை தோற்கடித்து பட்டத்தை தக்கவைத்தது. அவர்களுக்கு ரூ.1.35 கோடி பரிசுத்தொகையாக கிடைத்தது.

மூத்த வீராங்கனை சாரா எர்ரானி கிராண்ட்ஸ்லாமில் வென்ற 10-வது இரட்டையர் (6 பெண் கள் இரட்டையர், 4 கலப்பு இரட்டையர்) பட்டம் இதுவாகும்.