பிற விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சின்னர் அதிர்ச்சி தோல்வி

3-வது சுற்றுக்கு முன்பாக வெளியேறுவது கடந்த 26 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

பாரீஸ்,

“கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது.இதில் ஆண்கள் பிரிவில் பட்டம் வெல்வார் என்று கணிக்கப்பட்டிருந்த 'நம்பர் ஒன்' வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி) நேற்று 2-வது சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவர், ஜூவான் மானுவல் செருண்டோலோவை (அர்ஜென்டினா) சந்தித்தார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜூவான் மானுவல்

3-6, 2-6, 7-5, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சின்னரை வெளியேற்றி 3-வது சுற்றுக்குள் கால்பதித்தார்.

போட்டித்தரநிலையில் முதலிடம் வகித்த ஒரு வீரர் பிரெஞ்சு ஓபனில் 3-வது சுற்றுக்கு முன்பாக வெளியேறுவது கடந்த 26 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.