பாரீஸ்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று போட்டியில் உக்ரைனின் மர்டா கோஸ்ட்யூக், கனடா வீராங்கனை கோலுபிக்கை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் கோஸ்ட்யூக் 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.