பிற விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இளம் வீரர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

இளம் வீரர் ஜாகுப் மென்சிக், பிரேசிலின் ஜோவ் பொன்சேகா உடன் மோதினார்.

பாரீஸ்,

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் முன்னணி வீரரான செக் குடியரசின் 20 வயதான இளம் வீரர் ஜாகுப் மென்சிக், பிரேசிலின் ஜோவ் பொன்சேகா உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய மென்சிக் 6-4, 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.