பாரீஸ்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று போட்டியில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ், நெதர்லாந்தின் டி ஜாங்கை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஸ்வெரேவ் 7(7)-6(3), 6-4,6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.