நியூயார்க்,
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி வருகிற 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடக்கிறது. இதில் 48 அணிகள் பங்கேற்கின்றன.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகி வரும் நெதர்லாந்து அணி அல்ஜீரியாவுக்கு எதிரான நட்புறவு ஆட்டத்தில் விளையாடியது.
இந்த ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த தோல்வி தங்களுக்கு எச்சரிக்கை என பயிற்சியாளர் ரொனால்டு கோமன் கூறியுள்ளார்.