பிற விளையாட்டு

கிரிக்கெட் முதல் ஆக்கி வரை - ஆசிய விளையாட்டில் இன்று இந்தியா பங்கேற்கும் முக்கிய போட்டிகள்

ஜப்பானின் அய்ச்சி-நகோயா நகரில் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

டோக்கியோ,

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் களம் காண உள்ளனர்.

ஆசிய விளையாட்டு

ஜப்பானின் அய்ச்சி-நகோயா நகரில் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, ஜப்பான், சீனா உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் களம் காண உள்ளனர்.

இன்று நடைபெறும் முக்கிய போட்டிகளின் விவரம்:

பேட்மிண்டன்

பெண்கள் அணி கால்இறுதி: இந்தியா - ஜப்பான்- காலை 6 மணி

ஆண்கள் அணி கால்இறுதி: இந்தியா - ஜப்பான் - காலை 11.30 மணி

துப்பாக்கி சுடுதல்

10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் தகுதிச்சுற்று - பார்த் மானே, இளவேனில் – காலை 6.15 மணி

டேபிள் டென்னிஸ்

பெண்கள் அணி 2-வது சுற்று: இந்தியா - தாய்லாந்து - காலை 6.30 மணி

கபடி

ஆண்கள் லீக் சுற்று: இந்தியா - தென்கொரியா - காலை 7.15 மணி

கராத்தே

ஆண்கள் குமிதே 84 கிலோ அரைஇறுதி: சேத்தன் பாத் - காலை 7.35 மணி

குத்துச்சண்டை

பெண்கள் 52 கிலோ முதல் சுற்று: சாக்சி (இந்தியா) - அய்ரா வில்லி கேஸ் (பிலிப்பைன்ஸ்) - காலை 8.30 மணி

ஆண்கள் 55 கிலோ முதல் சுற்று: ஜதுமணி சிங் (இந்தியா) - தபா சந்திர பகதூர் (நேபாளம்) - பிற்பகல் 1.30 மணி

கிரிக்கெட்

பெண்கள் இறுதிப்போட்டி: இந்தியா - இலங்கை - காலை 10.30 மணி

ஆக்கி

ஆண்கள் லீக் சுற்று: இந்தியா - இலங்கை - மாலை 3.30 மணி

இன்றைய போட்டிகளில் குறிப்பாக பெண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை மோதல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும், பேட்மிண்டன், கபடி, ஆக்கி உள்ளிட்ட போட்டிகளிலும் இந்திய அணிகள் முக்கியமான ஆட்டங்களில் களம் காண உள்ளன.

SCROLL FOR NEXT