பிற விளையாட்டு

தேசிய டேபிள் டென்னிஸ்: வெண்கலம் வென்ற 13 வயது திவிஜா... இந்திய தரவரிசையில் முதலிடம்

அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் கடந்த 6 முதல் 13-ம் தேதி வரை தேசிய தரவரிசை டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்றது.

அகமதாபாத்,

இளம் டேபிள் டென்னிஸ் வீராங்கனை திவிஜா பால், பஞ்ச்குலாவில் நடைபெற்ற தேசிய தரவரிசை டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

வெண்கலப் பதக்கம்

அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் அக்டோபர் 6 முதல் 13-ம் தேதி வரை தேசிய தரவரிசை டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் 13 வயதுக்குட்பட்ட சிறுமிகள் ஒற்றையர் பிரிவில் திவிஜா பால் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இதற்கு முன்பு, பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 2026-ம் ஆண்டுக்கான உலக டேபிள் டென்னிஸ் இளையோர் போட்டியில், 13 வயதுக்குட்பட்டோர் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். மேலும், வதோதராவில் நடைபெற்ற இளையோர் போட்டிகளில் 11 வயதுக்குட்பட்டோர் மற்றும் 13 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளிலும் தங்கம் வென்றுள்ளார்.

அடுத்து சென்னையில்

தற்போது இந்தியாவின் 13 வயதுக்குட்பட்டோர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள திவிஜா பால், அடுத்ததாக சென்னையில் நடைபெறவுள்ள உலக டேபிள் டென்னிஸ் இளையோர் போட்டியிலும், அதனைத் தொடர்ந்து ஜலந்தரில் நடைபெறவுள்ள தேசிய தரவரிசை டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்க உள்ளார்.

SCROLL FOR NEXT