பிற விளையாட்டு

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றில் இந்திய வீரர் தோல்வி

இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், தைவானின் லின் சுன் யீ உடன் மோதினார்.

முல்ஹெம்,

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடர் முல்ஹெம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், தைவானின் லின் சுன் யீ உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 14-21, 9-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.