image courtesy: BAI via ANI 
பிற விளையாட்டு

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: ஒலிம்பிக் சாம்பியனை சாய்த்தார் லக்‌ஷயா சென்..!

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆக்சல்சென்னை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு லக்‌ஷயா சென் முன்னேறினார்.

முல்கேம் அன்டெர் ரூ,

ஜெர்மன் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள முல்கேம் அன்டெர் ரூ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) மோதினர்.

இந்த ஆட்டத்தில் லக்ஷயா சென் 21-13, 12-21, 22-20 என்ற செட் கணக்கில் ஆக்சல்சென்னை வீழ்த்தி அவருக்கு அதிர்ச்சி அளித்தார். அதுவும் கடைசி செட்டில் 16-19 என்ற பின்னடைவில் இருந்து மீண்டு வந்து அட்டகாசப்படுத்திய லக்ஷயா சென் இந்த வெற்றிக்காக 1 மணி 10 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. இன்று நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் லக்ஷயா சென், தாய்லாந்தின் குன்லாவுட் விடிட் சர்னை எதிர்கொள்கிறார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை