பிற விளையாட்டு

குளோபல் செஸ்: கார்ல்சென் அணி வெற்றி

கார்ல்சென்- மேக்சிம் வச்சியர் இடையிலான ஆட்டம் டிரா ஆனது.

பெங்களூரு,

4-வது குளோபல் செஸ் லீக் (ஜி.சி.எல்.) போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். தொடக்க நாளில் நடந்த ஒரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் தலைமையிலான அல்பின் ஏ.பி.எல். பைபர்ஸ் அணி 10-8 என்ற கணக்கில் மும்பை மாஸ்டர்சை வீழ்த் தியது. பைபர்ஸ் அணியில் விதித் குஜராத்தி, கோனெரு ஹம்பி வெற்றியை தேடித்தந்தனர். கார்ல்சென்- மேக்சிம் வச்சியர் இடையிலான ஆட்டம் டிரா ஆனது.

2 முறை சாம்பியனான திரிவேணி கான்டினென்டல் அணி 9-10 என்ற கணக்கில் கங்காஸ் கிராண்ட்மாஸ்டர்சிடம் தோல்வியை தழுவியது. இன் னொரு ஆட்டத்தில் அமெரிக்கன் கேம்பிட்ஸ் அணி 10-4 என்ற கணக்கில் அலாஸ்கன் நைட்சை வென்றது. 2-வது நாளான இன்று போட்டிகள் தொடர்ந்து நடைபெறும்.

SCROLL FOR NEXT